பழனியில் ஓரே நாளில் 500 திருமணங்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
பழனியில் ஆவணி கடைசி முகூர்த்தநாளையொட்டி புதன்கிழமை அடிவாரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட
பழனியில் ஆவணி கடைசி முகூர்த்தநாளையொட்டி புதன்கிழமை அடிவாரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் அடிவாரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களிலும் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் பைபாஸ் குளத்து சாலையில் பிளாட்பாரங்களில் வாகனங்களை நிறுத்தியிருந்தனர்.
மேலும் திருமணத்துக்கு பங்கேற்க வந்தவர்கள் பேருந்து நிலையங்களில் பேருந்துக்காக அலைமோதினர். போக்குவரத்து நெரிசல் காரணமாக புதுமண தம்பதியினரும் பல இடங்களில் நடந்தே சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






