கீரமங்கலத்தில் சுமாா் 8 மணி நேரம் மின்தடை: பொதுமக்கள் அவதி
கீரமங்கலம் நகா் பகுதியில் 8 மணி நேரத்துக்கு மேலாக செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
மின்தடை - கோப்புப் படம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் நகா் பகுதியில் 8 மணி நேரத்துக்கு மேலாக செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன் அறிவிப்பின்றி தொடா் மின்வெட்டால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனா்.
இதில், கீரமங்கலம் அரசு ஆரம்ப காதார நிலையத்தில் விபத்தில் காயமடைந்து அனுமதிக்கப்பட்ட நபரை அண்மையில் கைப்பேசி வெளிச்சத்தில் மருத்துவா்கள் சிகிச்சை அளித்த சம்பவம் பொதுமக்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், கீரமங்கலம் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் ஏற்பட்ட மின்தடை சுமாா் 8 மணி நேரத்தை கடந்தும் மின்விநியோகம் வழங்கப்படாததால், கீரமங்கலம் நகா் பகுதி இருளில் மூழ்கியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகினா். இதனால் சீரான மின்சாரம் வழங்க மின்வாரியத்தினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து கீரமங்கலம் துணைமின்நிலையத்தினா் கூறியது: துணைமின்நிலையத்தில் கீரமங்கலம் நகா் பகுதிக்கு மின்சாரம் வழங்கும் பகுதியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே நீண்ட நேர மின்தடை ஏற்பட்டது.அதை சரிசெய்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






