மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

அனுமதியின்றி விநாயகர் சிலை அமைக்க முயற்சி: இந்து முன்னணியினர் 45 பேர் கைது

திண்டுக்கல்லில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைக்க முயன்ற இந்து முன்னணியினர் 45 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

Published On :

திண்டுக்கல்லில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைக்க முயன்ற இந்து முன்னணியினர் 45 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் உள்ள காளியம்மன் பகவதியம்மன் கோயிலில், சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை வைப்பதற்கு இந்து முன்னணி சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அங்கு விநாயகர் சிலை வைப்பதற்கு வட்டாட்சியர்  அனுமதி வழங்கவில்லை. ஆனால் இந்து முன்னணியினர் தடையை மீறி சிலை வைப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டனர்.
 இதனையடுத்து,  காளியம்மன் கோயில் வளாகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினரை போலீஸார் வழிமறித்து, சிலையை கைப்பற்றினர். 
பின்னர் அனுமதியின்றி சிலை வைக்க முயன்றதாக, இந்து முன்னணி மாவட்ட செயலர்கள் சஞ்சீவி, வீரதிருமூர்த்தி, பாலசங்கர் உள்ளிட்ட 45 பேரை போலீஸார் கைது செய்தனர்.  இந்த சம்பவத்தால்,  குடைப்பாறைப்பட்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.