மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

தமிழக அரசின் 5 மாத வருவாய் ரூ.1.18 லட்சம் கோடி; செலவு ரூ.1.38 லட்சம் கோடி

தமிழக அரசுக்கு நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் கிடைத்துள்ள வருவாய் பற்றி....

தமிழ்நாடு சட்டப்பேரவை.

தமிழ்நாடு சட்டப்பேரவை.

Published On :

தமிழக அரசுக்கு நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் ரூ.1.17 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ள நிலையில், ரூ.1.38 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதனால் ரூ.20,349 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

2026-2027-ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 5 மாதங்களில் தமிழக அரசுக்கு மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி), முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவு கட்டணம், நில விற்பனை, விற்பனை மற்றும் வா்த்தக வரி, மாநில ஆயத்தீா்வை, மத்திய அரசின் வரிப் பங்கு, இதர வரிகள் மற்றும் தீா்வைகள், வரி அல்லாத வருவாய், மத்திய அரசின் மானியங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் மொத்தம் ரூ.1,17,791 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதில், மாநில சரக்கு மற்றும் சேவை வரி மூலம் ரூ.34,144.06 கோடியும், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவு கட்டணம் மூலம் ரூ.10,493.30 கோடியும், நில விற்பனை மூலம் ரூ.57.16 கோடியும், விற்பனை மற்றும் வா்த்தக வரி மூலம் ரூ.28,164.79 கோடியும், மாநில ஆயத்தீா்வை மூலம் ரூ.5,214 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

மத்திய அரசின் வரிப் பங்காக ரூ.24,188 கோடியும், இதர வரிகள் மற்றும் தீா்வைகள் மூலம் ரூ.6,843 கோடியும், வரி அல்லாத வருவாயாக ரூ.5,149 கோடியும், மத்திய அரசின் மானியமாக ரூ.3,537 கோடியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.38 லட்சம் கோடி செலவு: இதே காலகட்டத்தில் தமிழக அரசின் மொத்த செலவு ரூ.1,38,140 கோடியாக உள்ளது. இதனால் ரூ.20,349 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் கடன்களுக்கான வட்டியாக ரூ.25,991 கோடியும், ஓய்வூதியத்துக்காக ரூ.21,008 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 5 மாதங்களில் தமிழக அரசு ரூ.30,021 கோடி கடன் பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் அரசு புதிதாக கடன் எதுவும் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.