15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

வேடசந்தூரில் மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவர் கைது

வேடசந்தூரில் மனைவியைக் கொலை செய்து விட்டு, மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 

Updated On :25 பிப்ரவரி 2019, 7:35 am IST

வேடசந்தூரில் மனைவியைக் கொலை செய்து விட்டு, மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சிவநேசன் (45). இவருக்கும், விருதுநகரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி  மகள் உமாதேவி (40) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 
இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்த உமாதேவி மர்மமான முறையில் உயிரிழந்தார். உமாதேவிக்கு வலிப்பு ஏற்பட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து  உயிரிழந்து விட்டதாக, கணவர் சிவநேசன் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே நேரத்தில், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக சுந்தரமூர்த்தி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வேடசந்தூர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் உமாதேவி கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.  இதனையடுத்து, 
சிவநேசனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.