ஒட்டன்சத்திரம் அருகே புதன்கிழமை கிணற்றில் தவறி விழுந்த பேத்தியும் அவரைக் காப்பாற்ற முயன்ற தாத்தாவும் நீரில் முழ்கி
உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள வடகாடு மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலுச்சாமி (55).இவர் புதன்கிழமை தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க, பேத்தி ராஜஹர்சினியுடன் (3) சென்றுள்ளார். அப்போது ராஜஹர்சினி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற வேலுச்சாமி கிணற்றில் குதித்துள்ளார். அப்போது கிணற்றில் இருந்த இரும்பு குழாயில் மோதியதில் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இருவரும் நீரில் முழ்கி உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு தோல்வி: கே.சி. வேணுகோபால்
தேர்தல் முடிந்ததும் மக்கள் பாக்கெட்டுகளைக் காலி செய்வதே பாஜகவின் வாடிக்கை! -பினராயி விஜயன்

தர்மேந்திராவின் பத்ம விபூஷண் விருதை பெற்றுக்கொண்டார் ஹேமமாலினி! கலைத் துறை பட்டியல்!






