தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கொடைக்கானலில் அடிபட்டுக் கிடந்த சருகுமான்: காப்பாற்றிய வாகன ஓட்டுநருக்கு பாராட்டு

கொடைக்கானல் வத்தலகுண்டு சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த சருகு மானை மற்றொரு வாகன ஓட்டுனர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

News image

கொடைக்கானலில் அடிபட்டுகிடந்த சருகுமான்

Updated On :7 ஆகஸ்ட் 2020, 12:47 pm

கொடைக்கானல் வத்தலகுண்டு சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த சருகு மானை மற்றொரு வாகன ஓட்டுனர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து குறைந்துள்ள நிலையில் அவை சாலையிலும் தெருக்களிலும் நடமாடுகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையில் மச்சூர் என்ற இடத்தின் அருகே சருகு மான் ஒன்று சாலையின் ஓரம் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து வத்தலக்குண்டுவிலிருந்து கொடைக்கானலுக்கு வாகன ஓட்டுநர் ஜேம்ஸ் என்பவர் வந்து கொண்டிருந்துள்ளார்.   அப்போது மலைச்சாலையில் கிடந்த  சருகு மானை மீட்டு கொடைக்கானல் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

படுகாயத்துடன் போராடிக் கொண்டிருந்த அந்த சருகுமானுக்கு வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலமாக சிகிச்சை அளித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்

சருகு மானை மீட்டு கொடைக்கானல் வனத்துறையினரிடம் ஒப்படைத்த வாகன ஓட்டுனரை வனத்துறையினர் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.