கொடைக்கானலில் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் லாரி மோதி ஒருவர் படுகாயமடைந்தார்.தலைமறைவான வாகன ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கொடைக்கானல் நகராட்சியில் ஒட்டுநராக பணிபுரிந்து வருபவர் காந்தி(45). இவர் இன்று நகராட்சி குடிநீர் லாரியை எடுத்துக் கொண்டு அண்ணாசாலை வழியாக வேகமாக சென்றுள்ளார்.
அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் துணிக்கடை வைத்திருந்த சந்திரன்(55) என்பவர் மேல் மோதி அருகிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான தடுப்பு சுவரில் மோதி லாரி நின்றது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொது மக்கள் மற்றும் காவல்துறையினர் லாரியின் அடியில் சிக்கியிருந்த சந்திரனை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் லாரி ஓட்டுநர் காந்தி குடிபோதையில் இருந்துள்ளார் தற்போது தலைமறைவாகியுள்ள ஓட்டுநர் காந்தியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஒரு வழிப்பாதையாக உள்ள அண்ணா சாலைப்பகுதியில் எந்த வாகனங்களும் செல்லக் கூடாது என்பது காவல் துறையின் அறிவிப்பை யாரும் பின்பற்றுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கள்ளழகா் கோயில் கழிவுநீா் முறையாக சுத்திகரிக்கப்படுமா?

ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளிக்கச் சென்ற 4 இளைஞா்கள் மாயம்

திமுக அரசின் திட்டங்களால் அதிகளவில் பயனடைபவா்கள் ஹிந்துக்களே: கனிமொழி எம்.பி.

மேன்சன் குத்து பாடல்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


