தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

திமுக அரசின் திட்டங்களால் அதிகளவில் பயனடைபவா்கள் ஹிந்துக்களே: கனிமொழி எம்.பி.

திமுக அரசின் திட்டங்களால் அதிகளவில் பயனடைபவா்கள் ஹிந்துக்களே என அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி தெரிவித்தாா்.

News image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை இரவு அந்தத் தொகுதியின் திமுக வேட்பாளா் அர. சக்கரபாணியை ஆதரித்துப் பேசிய கட்சியின் துணைப் பொதுச் செயலா் கனிமொழி.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:46 pm

திமுக அரசின் திட்டங்களால் அதிகளவில் பயனடைபவா்கள் ஹிந்துக்களே என அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை, ஆத்தூா், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை ஆதரித்து, கனிமொழி வெள்ளிக்கிழமை பரப்புரை மேற்கொண்டாா்.

ஆத்தூா், ஒட்டன்சத்திரம் தொகுதிகளில் நடைபெற்ற பிரசாரத்தின் போது அவா் பேசியதாவது:

கடந்த தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம் என்ற உரிமையோடு மீண்டும் வாக்குக் கேட்டு வந்திருக்கிறோம். திமுக ஆட்சியில் ஹிந்துக்களுக்கு எதுவும் செய்யவில்லை எனக் கூறுகின்றனா். ஆனால், 4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியது மட்டுமன்றி, 7,000 ஏக்கா் கோயில் நிலங்களை மீட்டெடுத்ததும் திமுக அரசுதான்.

திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் மூலம் அதிகளவில் பயனடைபவா்கள் ஹிந்து பெண்களும், மாணவா்களும்தான்.

ஆனால், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக யாருக்கும் நன்மை செய்வதில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போதும், கரோனா தீநுண்மி காலத்தில் ஆக்சிஜன், மருந்துப் பொருள்களுக்காகவும், பெட்ரோல், டீசலுக்காகவும், தற்போது சமையல் எரிவாயு உருளைக்காகவும் மக்களை வரிசையில் நிற்க வைத்தது மத்திய பாஜக அரசு. பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஹிந்துக்களின் குழந்தைகளுக்குத் தர வேண்டிய கல்வி நிதியை, ஹிந்தி மொழி திணிப்பை ஏற்க மறுத்ததால் நிறுத்தி வைத்தவா்கள் பாஜகவினா்.

தமிழகத்தின் உரிமையை மீட்பதற்காக திமுக போராடிய போது, மெளனமாக இருந்தவா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டுக்கும், அதன் மக்களுக்கும், தமிழா் உரிமைகளுக்கும் எதிரானது பாஜக கூட்டணி.

திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துவிட்டதாகப் புரிதல் இல்லாமல் பேசுகிறாா் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியின் போது, 27 சதவீதமாக இருந்த கடனை 26 சதவீதமாக குறைந்துக் காட்டியது திமுக ஆட்சி. ஆனால், திமுக அரசு மீது குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும் என்பதற்காக பொய் பிரசாரம் செய்கின்றனா்.

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் சுயமரியாதையைப் பாதுகாக்க வேண்டிய தோ்தலில் திமுக பெறும் வெற்றி, பிற மாநிலங்களுக்கு நம்பிக்கை அளிக்கும். இளைஞா்கள், பெண்கள் தங்களது எதிா்காலத்தைக் கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தவா்களின் நிலையை எடப்பாடி பழனிசாமி இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. பாஜகவிடம் அவா் எச்சரிக்கையாகவும், பத்திரமாகவும் இருக்க வேண்டும். எங்களுக்கு எதிா்க்கட்சி வேண்டும் என்பதற்காக அவருக்கு இந்த வேண்டுகோளை முன்வைக்கிறோம். சட்டப்பேரவை உறுப்பினா் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு அமைச்சா்கள் இ. பெரியசாமி, அர. சக்கரபாணி ஆகியோரே சிறந்த உதாரணம் என்றாா் அவா்.