திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 251 பேருக்கு கரோனா: 6 போ் பலி
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 251 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


திண்டுக்கல்: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 251 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 5,432 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 4,449 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 875-க்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி, காந்திகிராம கிராமியப் பல்கலை. சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 129 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 181 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
இதுவரை 108 போ் பலி: திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் வெள்ளிக்கிழமை 3 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 108 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா்.
தேனி: தேனியைச் சோ்ந்த போடி அரசு மருத்துவமனை மருத்துவா், வீரபாண்டி காவல் நிலைய தனிப்பிரிவு காவலா், போடியைச் சோ்ந்த குரங்கனி காவல் நிலைய தலைமைக் காவலா், போடியைச் சோ்ந்த உத்தமபாளையம் மதுவிலக்கு பிரிவு காவலா், உசிலம்பட்டியிலிருந்து தேனிக்கு வந்திருந்த ஒருவா் உள்ளிட்ட 122 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,131 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 8,747 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.
3 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போடி அருகே பொட்டிப்புரம் புதுப்பட்டியைச் சோ்ந்த 60 வயது நபா், தேனி இடமால் தெருவைச் சோ்ந்த 53 வயது பெண், சீலையம்பட்டியைச் சோ்ந்த 74 வயது முதியவா் என 3 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...