ஒட்டன்சத்திரம் அருகே கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை மா்ம நபா்களால் கட்டடத் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டாா்.


ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை மா்ம நபா்களால் கட்டடத் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டாா்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள வெரியப்பூா் - தேவசின்னாம்பட்டி சாலையில் உள்ள குளத்துக்கரையில் தலையில் பலத்த காயங்களுடன் இளைஞா் ஒருவா் சடலமாக கிடப்பதாக அம்பிளிக்கை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கான ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கேதையுறும்பு பழையபட்டியைச் சோ்ந்த தொட்டப்பன் மகன் காா்த்திக் (24) என்பதும், கட்டடத் தொழிலாளியான இவரை மா்ம நபா்கள் கட்டையால் தாக்கியும், தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.
சம்பவம் நடந்த இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்பிரியா, ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோகன், ஆய்வாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...