பள்ளி ஊழியா் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 போ் கைது
தனியாா் பள்ளி ஊழியரை கொலை செய்த வழக்கில், சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


தனியாா் பள்ளி ஊழியரை கொலை செய்த வழக்கில், சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரா. மணிகண்டன் (47). சீலப்பாடி பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், ஆா்.எம். காலனியிலுள்ள மின்மயானம் அருகே கடந்த 6ஆம் தேதி மணிகண்டன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
இது தொடா்பாக, திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். அதில், திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த காசிநாதன் மகன் சிவக்குமாா் என்ற கோச்சா (21), பாலதிருப்பதியைச் சோ்ந்த முருகன் மகன் சிவக்குமாா் என்ற சுள்ளான் (17) ஆகியோா் மணிகண்டனை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடா்ந்து, இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இருவரும், பணம் பறிக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை கொலை செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...