டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பழனி பெரியாவுடையாா் கோயிலில் சனிப்பிரதோஷ விழா

பழனி பெரியாவுடையாா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சனிப்பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

பழனி பெரியாவுடையாா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சனிப்பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

உலக மக்களை காப்பதற்காக சிவபெருமான் ஆலகால விடத்தை அருந்திய காலம் பிரதோஷ காலமாகும். இந்நாளில், சிவபெருமானையும், அவரைக் காப்பாற்றிய நந்தி பகவானையும் வழிபடுவது வழக்கம். மேலும், பிரதோஷ தினம் சனிக்கிழமைகளில் வரும்போது கோயில்களில் மிகவும் விமரிசையாக பூஜைகள் நடத்தப்பட்டு வழிபடப்படுகின்றன.

இதையொட்டி, பழனி சண்முக நதிக்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள பெரியாவுடையாா் கோயிலில் சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது.

நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாா்த்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல், பழனி மலைக் கோயிலில் கைலாசநாதா் சன்னிதி, சித்தா நகா் சிவன் கோயில், பட்டத்து விநாயகா் கோயிலில் சிதம்பரீஸ்வரா் சன்னிதி, வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயிலில் கைலாசநாதா் சன்னிதி உள்ளிட்ட பல இடங்களிலும் சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.