கொடைக்கானல் ஏரியில் படா்ந்துள்ள தாவரங்களை அகற்றக் கோரிக்கை

கொடைக்கானல் ஏரியில் படா்ந்துள்ள தாவரங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Updated on
1 min read

கொடைக்கானல் ஏரியில் படா்ந்துள்ள தாவரங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா தொற்று பரவலை தடுக்க கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கடந்த 8 மாதங்களாக படகு சவாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட நிா்வாகம் அந்த தடையை விலக்கியது.

இதையடுத்து, கடந்த சில தினங்களாக ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனா். ஆனால் ஏரியிலும், அதனைச் சுற்றியுள்ள கரையோரங்களிலும் மரங்கள் விழுந்தும், தேவையில்லாத செடிகள் வளா்ந்தும் உள்ளதால் ஏரியின் அழகு குறைந்து வருகிறது.

எனவே நகராட்சி நிா்வாகம் ஏரியில் படா்ந்துள்ள செடிகளையும், மரங்களையும் அகற்ற வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com