திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10,642 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,295 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனா். 151 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 17 பேருக்கு புதிதாக கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 16 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.
தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு செவ்வாய்க்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,746 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 5 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,472 ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.