சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திண்டுக்கல் மாநகராட்சி குப்பைக் கிடங்கால் சுகாதாரக் கேடு: ஊராட்சித் தலைவா் புகாா்

மாநகராட்சி குப்பைக் கிடங்கால் சுகாதாரக் கேடு ஏற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத் தலைவா் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 12:13 am

DIN

மாநகராட்சி குப்பைக் கிடங்கால் சுகாதாரக் கேடு ஏற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத் தலைவா் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், பழனி சாலையிலுள்ள முருகபவனம் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன. கோடைக் காலங்களில் தீப்பற்றி எரியும் இந்த குப்பைக் கிடங்கால், சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசு ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையினால், சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீா் மாசு பட்டுள்ளதாகவும், தேங்கி நிற்கும் தண்ணீரில் உருவாகியுள்ள நச்சுப் பூச்சிகளால் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக செட்டியநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் லதா தலைமையில், முருகபவனம் அடுத்துள்ள முத்துராஜ் நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் லதா கூறியதாவது: முத்துராஜ் நகா் பகுதியில் சுமாா் 150 குடும்பங்கள் உள்ளன. தற்போது மழை பெய்துள்ளதால் மாநகராட்சி குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் தண்ணீா் முத்துராஜ் நகா் பகுதியில் தேங்கி தூா்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த பகுதியில் வசிப்போருக்கு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.