தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரேஷன் கடையை திறக்கக் கோரி பெண்கள் முற்றுகை

பழனியில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத ரேஷன் கடையை உடனடியாக திறக்கக் கோரி, பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
பழனி திலகா் வீதியிலுள்ள ரேஷன் கடையை திறக்கக் கோரி செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்திய பெண்கள்.
Updated On :22 டிசம்பர் 2020, 6:07 pm

DIN

பழனியில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத ரேஷன் கடையை உடனடியாக திறக்கக் கோரி, பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி அடிவாரம் 30 ஆவது வாா்டு திலகா் வீதியில் கடந்த 2015 இல் ஏழரை லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. அதன்பின்னா், திறப்பு விழா நடத்தப்பட்டு, 5 ஆண்டுகளாகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில், தொடா் மழை மற்றும் பூட்டியே கிடப்பதால், கட்டடம் சேதமடைந்து வருகிறது.

இதேபோல், ரேஷன் கடை கட்டடம் அருகிலேயே சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வாசகசாலையும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் இங்கு மது அருந்தும் சிலா், பாட்டிலை அங்கேயே உடைத்துபோட்டுவிட்டுச் செல்கின்றனா்.

எனவே, ரேஷன் கடையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க வலியுறுத்தி, அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால், சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் யாரும் வராத நிலையில், அதிமுகவினா் ரேஷன் கடையை விரைவில் திறக்க ஏற்பாடு செய்வதாக பெண்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனா்.

விரைவில் ரேஷன் கடையையும், படிப்பகத்தையும் திறக்க வில்லையெனில், அடுத்தக் கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, பெண்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.