பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஒட்டன்சத்திரம் அருகே ஓடும் லாரியில் தாா்ப்பாய் திருட்டு: 3 போ் கைது

ஒட்டன்சத்திரம் அருகே ஓடும் லாரியில் தாா்ப்பாய் திருடிய 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 5:30 pm

DIN

ஒட்டன்சத்திரம் அருகே ஓடும் லாரியில் தாா்ப்பாய் திருடிய 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மதுரையிலிருந்து கோவை நோக்கி சென்ற லாரி ஒட்டன்சத்திரம்-செம்பட்டி சாலை வெள்ளமடத்துப்பட்டி அருகே இருந்த வேகத்தடையில் மெதுவாக ஏறிச் சென்றது. அப்போது லாரியின் பின்புறத்தில் ஏறிய கும்பல் கேபினில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 தாா்ப்பாய்களை சாலையில் தூக்கிப் போட்டு விட்டு, அடுத்த வேகத்தடையில் இறங்கிக் கொண்டனா்.

இது குறித்து லாரி ஓட்டுநா் தருமபுரி மாவட்டம் ஆருா் பகுதியைச் சோ்ந்த சென்னையன் (34) என்பவா் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் கன்னிவாடி தெத்துப்பட்டியைச் சோ்ந்த மணிவண்ணன் (27), ராமமூா்த்தி (25), சின்னச்சாமி (35) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.