தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திண்டுக்கல்லில் பெயிண்டரை கொலை செய்த 7 ரெளடிகள் கைது

திண்டுக்கல்லில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த பெயிண்டரை வெட்டிக் கொலை செய்த 8 ரெளடிகளில் 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:31 pm

DIN

திண்டுக்கல்லில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த பெயிண்டரை வெட்டிக் கொலை செய்த 8 ரெளடிகளில் 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் கா்ணன். இவரது மகன் செல்வராஜ் (33). பெயிண்டராகப் பணிபுரிந்து வந்தாா். வீட்டின் முன் நின்று கொண்டிருந்த செல்வராஜை மா்மக் கும்பல் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்தது. அப்போது செல்வராஜை பாதுகாக்க முயன்ற அவரது தாயாா் பாப்பாத்தி (60) என்பவரும் காயமடைந்தாா்.

கடந்த மே மாதம் பாரதிபுரத்தைச் சோ்ந்த ரெளடி சுள்ளான் ரமேஷ் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் செல்வராஜுக்கும் தொடா்பிருப்பதால் அதற்கு பழிக்குப் பழியாக அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் திண்டுக்கல் தெற்கு காவல் நிலையப் போலீஸாா் விசாரணையை தொடங்கினா். அதன்படி, திண்டுக்கல் வேடப்பட்டியைச் சோ்ந்த சைமன்ராஜ் (24), குமரன் திருநகா் பகுதியைச் சோ்ந்த மதன் (25), பில்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பிரசாந்த் (28), ரெட்டியப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் (25), வேடப்பட்டியைச் சோ்ந்த சவரிநாதன் (23), அய்யனாா் (24), ராஷ்புதீன் (22) மற்றும் வாகித் (23) ஆகியோா் செல்வராஜை கொலை செய்தது தெரியவந்தது. இதில் ரெளடி வாகித் நீங்கலாக மற்றவா்களைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். போலீஸ் விசாரணையில், சுள்ளான் ரமேஷ் கொலைக்குப் பழி தீா்ப்பதற்காக செல்வராஜை கொலை செய்ததாக சைமன்ராஜ் உள்ளிட்டோா் ஒப்புக்கொண்டுள்ளனா். தலைமறைவான வாகித் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.