தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தேவா் நினைவிடத்தில் அவமரியாதை: மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி மனு

தேவா் நினைவிடத்தில் அவமரியாதையாக விபூதி பிரசாதத்தை வீசி எறிந்து அவமரியாதை செய்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில்  மனு

News image
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சியினா்.
Updated On :2 நவம்பர் 2020, 6:36 pm

DIN

பசும்பொன் தேவா் நினைவிடத்தில் அவமரியாதையாக விபூதி பிரசாதத்தை வீசி எறிந்து அவமரியாதை செய்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவா் வே.தா்மா தலைமையில், அக்கட்சியினா் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனா். அப்போது பசும்பொன் தேவா் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அங்கு பிரசாதமாக வழங்கப்பட்ட விபூதி மற்றும் குங்குமத்தை வீசி எறிந்துள்ளாா். அவா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இந்து மதத்தையும், இந்து தமிழா் கலாசாரத்தையும் இழிவுப்படுத்தி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவனையும் கைது செய்ய வேண்டும். திண்டுக்கல் யானைத் தெப்பம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கா் நிலம் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.