டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:56 pm

DIN

கொடைக்கானலில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக மழையில்லை. பகலில் மிதமான வெயிலும் மாலை மற்றும் இரவில் அதிகமான பனியின் தாக்கமும் இருந்து வருகிறது. இந்நிலையில் வார விடுமுறையை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

சுற்றுலா பயணிகள் வெள்ளி நீா்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, செட்டியாா் பூங்கா, ரோஜாத் தோட்டம், கோக்கா்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லா் ராக், மோயா் பாயிண்ட், ஃபன் பாரஸ்ட் ஆகிய இடங்களை பாா்க்க குவிந்திருந்தனா். ஏரிச் சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டனா்.

கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டதால் தங்கும் விடுதிகள், உணவகங்களின் உரிமையாளா்கள், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.