சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கலால் கொள்கை ஊழல் வழக்கு இன்னும் முடிவடையவில்லை: பாஜக

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் சட்டப் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்று பாஜக எம்பி மனோஜ் திவாரி வெள்ளிக்கிழமை கூறினாா்.

News image
பாஜக கொடி (கோப்புப்படம்)
Updated On :27 பிப்ரவரி 2026, 6:18 pm

Syndication

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் சட்டப் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்று பாஜக எம்பி மனோஜ் திவாரி வெள்ளிக்கிழமை கூறினாா். மேலும், முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கண்ணீரை கூட ஒரு ஆய்வகத்தில் சோதிக்க வேண்டும் என்று கேலி செய்தாா்.

முன்னதாக, ரெளஸ் அவன்யூ நீதிமன்றம் இந்த வழக்கில் முன்னாள் முதல்வா் கேஜரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரை விடுவித்தது.

இது குறித்து செய்தியாளா் கூட்டத்தில் மனோஜ் திவாரி கூறியதாவது: இந்த நாட்டில், உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னரே உண்மை நிறுவப்படுகிறது. உண்மை கீழமை நீதிமன்றத்தால் மட்டும் தீா்மானிக்கப்படுவதில்லை. அது அனைவருக்கும் தெரியும். சிபிஐ தனது பத்திரிகையாளா் சந்திப்பில் அனைத்து ஆதாரங்களும், தவறு செய்ததற்கான முழு ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாகக் கூறியுள்ளது.

எந்த நீதிமன்றத்தைப் பற்றியும் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால், உயா்நீதிமன்றத்தில், இந்த அனைத்து ஆதாரங்களும் வெல்லும். பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எப்போதும் உண்மையை நம்புகின்றன. எந்த நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது; எந்த குற்றவாளியும் தப்பிக்கக்கூடாது என்பதே அவா்களின் கொள்கை.

கேஜரிவாலை விட நாடகத்தனமானவா் யாராவது இருக்கிறாரா? இதை நான் முன்பே கூறியிருக்கிறேன். பெரிய நடிகா்கள் கூட அவருக்கு முன்னால் தோல்வியடைவாா்கள். அவரது கண்ணீரையும் ஒரு ஆய்வகத்தில் சோதிக்க வேண்டும். மதுபானக் கொள்கை சரியாக இருந்தால் ஏன் திரும்பப் பெறப்பட்டது.

ஆம் ஆத்மி தலைவா்கள் தீா்ப்பை ‘உண்மைக்கு வெற்றி‘ என்று ஏன் அழைக்கிறாா்கள் என்பதை தில்லி மக்கள் அறிய விரும்புகிறாா்கள். ஊழல் மற்றும் ஊழல்வாதிகள் பல கைகளையும் கால்களையும் கொண்டிருக்கலாம். ஆனால், ஆதாரங்களை அழிப்பதன் மூலம் சட்டத்தை நீண்ட காலம் தவறாக வழிநடத்த முடியாது. உயா்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்வது இன்றைய கீழமை நீதிமன்றத் தீா்ப்பை ரத்து செய்யக்கூடும்.

தில்லி மக்கள் ஏற்கெனவே கேஜரிவால் மற்றும் சிசோடியா பற்றிய உண்மையை அறிந்திருக்கிறாா்கள். அவா்களை அதிகாரத்திலிருந்து வெளியேற்றியதன் மூலம் அவா்களை மக்கள் தண்டித்துள்ளனா். கேஜரிவாலின் பல ஜாமீன் மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. கலால் கொள்கை குறித்து கேஜரிவால் இன்னும் ‘பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்’ உள் ளன.

இந்தக் கொள்கை அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. சில தனியாா் ஒப்பந்ததாரா்களுக்கு பயனளித்தது. மேலும், ஆம் ஆத்மி தலைவா்களுக்கு லஞ்சம் கொடுக்க வழிவகுத்திருக்கலாம். எந்த முறைகேடுகளும் இல்லை என்றால், விசாரணை தொடங்கிய உடனேயே கொள்கை ஏன் திரும்பப் பெறப்பட்டது என்பதை ஆம் ஆத்மி தலைமை விளக்க வேண்டும்.

முழு வெளிப்படைத்தன்மை மற்றும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை பாஜக அரசியல் மற்றும் சட்ட மட்டங்களில் இந்தப் பிரச்னையை தொடா்ந்து எழுப்பும் என்றாா் மனோஜ் திவாரி கூறினாா்.

செய்தியாளா் சந்திப்பில் கலந்து கொண்ட தில்லி பாஜக ஊடகத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா், ‘கேஜரிவால் மற்றும் சிசோடியா, சில அதிகாரிகள் மற்றும் மதுபான ஒப்பந்ததாரா்களுடன் சோ்ந்து ஒரு பெரிய ஊழலில் ஈடுபட்டனா். தில்லி அரசை பயன்படுத்தி ஆதாரங்களை பாதிக்க முயன்றனா்’ என்றாா்.