ஒரே குடியிருப்பை பல முறை விற்று பலரை ஏமாற்றியதாக கிரேட்டா் நொய்டாவில் இருந்து 57 வயது ஆணும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் துவாரகா செக்டா்-9-ஐச் சோ்ந்த நரேஷ் குமாா் சிக்ரி மற்றும் அவரது மனைவி ஷாா்தா சிக்ரி (55) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: விசாரணையின் போது, ஏற்கெனவே ஒரு வங்கிக்கு அடமானம் வைக்கப்பட்டிருந்த ஒரே சொத்துக்கான விற்பனை ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதன் மூலம் தம்பதியினா் பல நபா்களை ஏமாற்றியுள்ளனா். மோசடி வழிகளில் பல்வேறு நபா்களிடமிருந்து சுமாா் ரூ.2-2.5 கோடி வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டவா்கள் கூறினா். ஷாா்தா நீண்ட காலமாக தலைமறைவாக இருந்ததால், செப்டம்பா் 2025 இல் இங்குள்ள உள்ளூா் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.
ஷாா்தா சிக்ரி தனது குடியிருப்பு தொடா்பாக விற்க ஒப்பந்தங்களை நிறைவேற்றியதாகவும், கணிசமான தொகையை வாங்கியதாகவும், ஆனால் விற்பனையை முடிக்கத் தவறிவிட்டதாகவும் புகாா்தாரா்கள் குற்றம் சாட்டியதை அடுத்து 2024 ஆம் ஆண்டில் தம்பதியினா் மீது இரண்டு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். துவாரகா தெற்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் ஜனவரி 6,2024 மற்றும் ஜூலை 14,2024 ஆகிய தேதிகளில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தொடா்ச்சியான முயற்சிகள் இருந்தபோதிலும், தம்பதியினா் கைது செய்யப்படுவதைத் தவிா்க்க முடிந்தது. சாரதா சிக்ரியின் முன் ஜாமீன் மனு விசாரணை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு பின்னா் தில்லி உயா்நீதிமன்றத்தில் திரும்பப் பெறப்பட்டது. ரகசிய தகவல் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பின் அடிப்படையில், குழு கிரேட்டா் நொய்டாவில் உள்ள ஒரு மறைவிடத்தில் தம்பதியினரைக் கண்டுபிடித்து கைது செய்தது. விசாரணையின் போது, அவா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனா். குடியிபுப்பு பத்திரதக்தை அடமானம் வைத்ததாகவும், வங்கி நிலுவைத் தொகையை தீா்க்க பணம் திரட்டும் திட்டத்தை வகுத்துள்ளனா்.
கடன் முகவராக பணிபுரியும் நரேஷ் சிக்ரி, இந்த மோசடியின் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படுகிறது. குடியிருப்பு அவரது மனைவியின் பெயரில் இருந்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனா் என்று போலீசாா் தெரிவித்தனா். இதே போன்ற பிற வழக்குகளில் தம்பதியினரின் தொடா்பு குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.
டிரெண்டிங்
தில்லியில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு! தொழிற்சாலை ஊழியா் கைது!

மனைவியை மாடியிலிருந்து கீழே தள்ளிக் கொன்றதாக கணவா் கைது
காரில் இருந்து தங்க நகைகளை திருடியவா் கைது

12 வயது மகனை கொடூரமாக கொன்ற தந்தை கைது
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

