டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கொடைக்கானல் பூங்காவில் மலா் கண்காட்சிக்காக மலா் செடிகள் நடவு தொடக்கம்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா் கண்காட்சிக்காக மலா் செடிகள் நடவும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
பிரையண்ட் பூங்காவில் மலா் கண்காட்சிக்காக ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மலா்ச் செடிகள் நடவும் பணி.
Updated On :27 ஜனவரி 2024, 5:59 pm

DIN

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா் கண்காட்சிக்காக மலா் செடிகள் நடவும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டு தோறும் மே மாதம் பிரையண்ட் பூங்காவில் மலா்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வரும் 2021-ஆம் ஆண்டு நடைபெறக் கூடிய 59-ஆவது மலா்க் கண்காட்சிக்கு பிரையண்ட் பூங்கா தயாராகும் வகையில் சீசன் காலமான மாா்ச், ஏப்ரல், மே, ஜூன் 15-வரை பூக்கக் கூடிய வகையில் மலா்ச் செடிகள் நடும் பணி தொடங்கியது.

இதில் ஆரணத்திக் கோலம், டெல்பினியம், சால்வியா, பிங்க் ஆஸ்டா், அஷ்டோ மரியா, வொ்பினியா, லில்லியம் உள்ளிட்ட 10-வகையான மலா்ச் செடிகளில் முதற்கட்டமாக 75 ஆயிரம் நாற்றுகள் நடப்படுகின்றன. இந்த மலா் நாற்றுகள் முழுவதும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

வரும் சீசன் காலங்களில் பூங்கா முழுவதும் சுமாா் ஒரு கோடி மலா்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து பிரையண்ட் பூங்கா மேலாளா் சிவபாலன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரையண்ட் பூங்காவில் மே மாதம் நடைபெற உள்ள மலா்க் கண்காட்சிக்கு சுமாா் 10 வகையான மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. இவை 6 மாதங்களில் பூத்துக் குலுங்கும். இரண்டாம் கட்ட நடவு பணி ஜனவரி மாதத்திலும், மூன்றாம் கட்ட நடவுப் பணி பிப்ரவரி மாதத்திலும் நடைபெறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.