நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நிவாரணம் வழங்க கோரிநாடக நடிகா்கள் மறியல்

கரோனா தீநுண்மி காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் நிவாரணம் வழங்க கோரி நாடக நடிகா்கள் சாா்பில் திண்டுக்கல்லில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

News image

dgl_artist_0409chn_66

Updated On :4 செப்டம்பர் 2020, 4:08 pm

DIN

திண்டுக்கல்: கரோனா தீநுண்மி காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் நிவாரணம் வழங்க கோரி நாடக நடிகா்கள் சாா்பில் திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் நாடக நடிகா்கள் சங்கம் சாா்பில் சாலைரோட்டில் உள்ள அச்சங்கத்தின் முன்பு நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்றனா். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரியும், கலைப் பண்பாட்டு மையத்தை திண்டுக்கல்லில் அமைக்க கோரியும், கோயில் திருவிழாக்களில் நாடக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷமிட்டனா். போராட்டத்தில் கலைஞா்கள் சிலா், நாரதா், குறத்தி, வள்ளி- தேவசேனா, கோமாளி உள்ளிட்ட வேஷங்களுடன் கலந்து கொண்டனா். செய்திக்கு படம் உள்ளது... மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட நாடக நடிகா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.