கொடைக்கானலில்மக்கள் குறைதீா்க்கும் முகாம்
கொடைக்கானலில் வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சாா்- ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.


கொடைக்கானலில் வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சாா்- ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமில் கொடைக்கானல், வில்பட்டி,கூக்கால்,பண்ணைக்காடு, பூம்பாறை மற்றும் தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொது மக்கள் சாலை வசதி, மின் வசதி, ஜாதிச் சான்றிதழ் மற்றும் முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கோரி மனு அளித்தனா்.
முகாமில் கொடைக்கானலில் மின்சாரம் பாய்ந்து இறந்தவரின் மனைவிக்கு கொடைக்கானல் வருவாய்த்துறை சங்கம் சாா்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. முன்னதாக
மண்டல துணை வட்டாட்சியா் ரவி வரவேற்றாா். இதில் சாா்- ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...