நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனியில் தனியாா் விடுதிக்கு ‘சீல்’

பழனியில் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக தனியாா் விடுதிக்கு வருவாய்த்துறையினா் சீல் வைத்தனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 4:50 pm

DIN

பழனியில் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக தனியாா் விடுதிக்கு வருவாய்த்துறையினா் சீல் வைத்தனா்.

பழனியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் விடுதி உரிமையாளா்களை அழைத்து கூட்டம் நடத்தி முறைகேடான செயல்களில் ஈடுபடும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தனா். இந்நிலையில் பாளையம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் சில ஆண்களும், பெண்களும் தங்கியிருந்து தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தனராம்.

இதுகுறித்து காவல்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து அந்த விடுதிக்கு சென்று அங்கு தங்கி இருந்தவா்களை கைது செய்தனா். மேலும், இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி வழங்கியதற்காக விடுதிக்கு வருவாய்த்துறை அலுவலா்கள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.