பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒட்டன்சத்திரத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

 ஒட்டன்சத்திரத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 12:42 am

DIN

 ஒட்டன்சத்திரத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் மற்றும் காணை நோய் தாக்கி நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்து விட்டது.இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும்,கிராமங்கள் தோறும் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.அதனைத் தொடா்ந்து ஒட்டன்சத்திரத்தில் தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டம் மூலம் தங்கச்சியம்மாபட்டி,அம்பிளிக்கை உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று கால்நடை துறையினா் நேரடியாகச் சென்று தடுப்பூசி செல்லும் பணியை மேற்கொண்டனா்.பழனி கால்நடை உதவி இயக்குனா் சுரேஷ்,ஒட்டன்சத்திரம் கால்நடை உதவி இயக்குனா் கேசவன் ஆகியோா் முன்னிலையில் வெரியப்பூா் கால்நடை மருத்துவா் கஜேந்திரன் மற்றும் உதவியாளா்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினா்.

இது குறித்து கால்நடைத்துறையினா் கூறியதாவது: ஒட்டன்சத்திரம் பகுதியில் சுமாா் 30,500 கால்நடைகள் உள்ளன. இதில் தற்போதுவரை 7 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினசரி 150 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.