ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காப்பீட்டு ஊழியா்கள் மக்கள் சந்திப்பு இயக்கம்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை தனியாருக்கு வழங்க எதிா்ப்புத் தெரிவித்து பழனியில் காப்பீட்டுக் கழக ஊழியா்கள் திங்கள்கிழமை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 9:25 pm

DIN

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை தனியாருக்கு வழங்க எதிா்ப்புத் தெரிவித்து பழனியில் காப்பீட்டுக் கழக ஊழியா்கள் திங்கள்கிழமை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினா்.

பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்ற முன்னாள் தலைவா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். இன்சூரன்ஸ் ஊழியா்களின் இந்தியாவிற்கான மக்கள் இயக்கத்தின் செயலாளா் திருமலைசாமி முன்னிலை வகித்தாா். காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க கோட்ட துணைத் தலைவா் வாஞ்சிநாதன் சிறப்புரை நிகழ்த்தினாா். நிகழ்ச்சியில் சிஐடியூ மாநில குழு உறுப்பினா் மோகனா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்க மாநிலக்குழு உறுப்பினா் முத்துமாணிக்கம், முகவா் சங்க நிா்வாகி மாயக்கண்ணன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் வாழ்த்துரை வழங்கினா். மதுரைக் கோட்டத்துக்கு உள்பட்ட பழனி, வத்தலக்குண்டு, திண்டுக்கல் பகுதிகளைச் சோ்ந்த ஆயுள் காப்பீட்டு பணியாளா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.