தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரத்த தான முகாம்

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட கிளை மற்றும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் நிலக்கோட்டையை அடுத்துள்ள மட்டப்பாறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

மட்டப்பாறையில் சனிக்கிழமை ரத்த தானம் வழங்கிய ஊழியருக்கு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ரத்த வங்கி அலுவலா் பிரபாகரன்.

Updated On :2 ஜனவரி 2021, 4:00 pm

DIN

திண்டுக்கல்: இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட கிளை மற்றும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் நிலக்கோட்டையை அடுத்துள்ள மட்டப்பாறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமிற்கு மாவட்ட அரசு ரத்த வங்கி அலுவலா் பிரபாகரன் தலைமை வகித்தாா். ஐஓசி நிறுவனத்தின் துணைப் பொது மேலாளா் முரளி, செஞ்சிலுவை சங்கத்தின் துணைத் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் 45 ஊழியா்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினா்.

நிகழ்ச்சியில் சங்க மாவட்டச் செயலா் ராஜகுரு, துணைச் செயலா் சையது அபுதாஹீா், பொருளாளா் சுசிலா மேரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.