பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 11:46 pm

DIN

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 11,078 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,802 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 78 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 7 பேருக்கு புதிதாக கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 16 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு செவ்வாய்க்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,976 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 8 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,721 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.