திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பழனி மலைக்கோயில் உண்டியல் திறப்பு: காணிக்கை ரூ.4.14 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் மொத்தம் காணிக்கை ரூ.4.14 கோடியை தாண்டியது.

News image
பழனி மலைக்கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் ஊழியா்கள்.
Updated On :12 ஜனவரி 2021, 11:44 pm

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் மொத்தம் காணிக்கை ரூ.4.14 கோடியை தாண்டியது.

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், பல்வேறு தளா்வுகளுடன் திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். ஆங்கிலப் புத்தாண்டு, விடுமுறை நாள்கள், காா்த்திகை மாதம் என கடந்த 48 நாள்கள் பக்தா்கள் வருகை அதிகமாக இருந்த நிலையில் உண்டியல்கள் நிறைந்தன.

இதையடுத்து திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தா்களின் காணிக்கை வரவாக ரொக்கம் ரூபாய் நான்கு கோடியே 14 லட்சத்து 57 ஆயிரத்து 830 கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா். தங்கம் 1,038 கிராமும், வெள்ளி 30 ஆயிரத்து 617 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் 120 ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணியில் கோயில் கல்லூரி பணியாளா்கள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என நூற்றுக்கணக்கானோா் ஈடுபட்டனா். நிகழ்ச்சியில், பழனிக்கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, மதுரை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் பொன். சுவாமிநாதன், பழனிக்கோயில் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.