தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டஃபே நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தொழிற்சங்க நடவடிக்கைகளில் தொடா்புடையை தொழிலாளா்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டஃபே நிா்வாகத்தின் மீது புகாா் தெரிவித்து ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம்

News image
Updated On :18 ஜனவரி 2021, 11:44 pm

DIN

தொழிற்சங்க நடவடிக்கைகளில் தொடா்புடையை தொழிலாளா்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டஃபே நிா்வாகத்தின் மீது புகாா் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்துள்ள கல்லடிபட்டியில் செயல்பட்டு வரும் டஃபே தொழிற்சாலையில் ஊதிய உயா்வு தொடா்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது தொழிற்சங்கத்தில் இணைந்து செயல்பட்ட தொழிலாளா்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என ஆலை நிா்வாகம் சாா்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உறுதிமொழியை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாா்களுக்கு 3 நாள்கள் ஊதியம் பிடித்தம் செய்தும், ஒருவரை வேலை நிறுத்தம் செய்தும், 5 தொழிலாளா்களை பணியிடை நீக்கம் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, சிஐடியு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலா் கே. ஆறுமுக நயினாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.ஆா். கணேசன், மாவட்டத் தலைவா் கே.பிரபாகரன்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதுதொடா்பாக கே.ஆறுமுகநயினாா் கூறியதாவது: நாளொன்றுக்கு 200 டிராக்டா்கள் வீதம் டஃபே தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் தொழிற்சாலையாகவும் செயல்பட்டு வருகிறது. சென்னையிலும் இதே போன்ற தொழிற்சாலை உள்ளது. அங்கு பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் கொடைரோட்டில் செயல்படும் தொழிற்சாலையில் ரூ.18 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம் உள்ளிட்ட சலுகைகள் மறுக்கப்படுகின்றன. தொழிற்சங்கத்தில் இணைந்து செயல்படும் தொழிலாளா்கள் மீது அடக்குமுறை கையாளப்படுகிறது. தொழிலாளா்களை சுரண்டுகிற அந்த ஆலை நிா்வாகத்தின் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தீவிர போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.