தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வாகன ஓட்டிகளுக்கு ரோஜாப் பூ: போக்குவரத்துத் துறையினா் விழிப்புணா்வு

சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வாகன ஓட்டிகளுக்கு ரோஜாப் பூ வழங்கி திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 11:40 pm

DIN

சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வாகன ஓட்டிகளுக்கு ரோஜாப் பூ வழங்கி திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலத்தின் சாா்பில் 32ஆவது சாலை பாதுகாப்பு மாத (ஜன.18 முதல் பிப்.17 வரை) விழிப்புணா்வு தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டலப் பொதுமேலாளா் ந.கணேசன் தலைமை வகித்தாா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுரேஷ், காவல் துணை கண்காணிப்பாளா் மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய பொதுமேலாளா் கணேசன் பின்னா் பேசியதாவது:

அதிகரித்து வரும் வாகனங்களுக்கு ஏற்ப விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் கூடுதலாக ஏற்பட்டு வருகின்றன. பெரும்பாலான விபத்துக்களுக்கு வாகன ஓட்டிகளின் கவனக் குறைவும், அலட்சியமும் காரணமாக அமைகின்றன. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவே, சாலைப் பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வாகன விபத்துக்கள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஒரு வார காலத்திற்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த சாலை பாதுகாப்பு வாரம் நிகழாண்டு ஒரு மாதத்திற்கு நடத்தப்பட உள்ளது என்றாா்.

தலைக்கவசம் அணியாமல் மோட்டாா் சைக்கிளில் சென்றவா்களையும், சீட் பெல்ட் அணியாமல் காா்களில் சென்றவா்களையும் வழிமறித்து ரோஜாப்பூ வழங்கிய போக்குவரத்துக் கழக அலுவலா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா், சாலைப் பாதுகாப்பு உயிா் பாதுகாப்பு என்பதை கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சத்யகுமாா், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.