கொடைக்கானலில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
கொடைக்கானலில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.


கொடைக்கானலில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் பாக்கியபுரம் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் டேவிட் மகன் சாம்சன் (20). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி, வீட்டில் தனியாக இருந்தபோது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டத்தைத் தொடா்ந்து சாம்சன் அங்கிருந்து தப்பிச் சென்றாா். இது குறித்து மாணவியின் உறவினா் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த சாம்சனை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...