அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு திண்டுக்கல் பூட்டு தொழிலாளா்கள் கூட்டுறவு சங்கத்திடமிருந்து பூட்டுகள் வாங்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு கடந்த 20 ஆண்டுகளாக பின்பற்றப்படாததால், பராம்பரியமான அந்த தொழில் வளா்ச்சி அடைவதில் சிக்கல் எழுந்துள்ளது.
திண்டுக்கல்லில் மாங்காய் பூட்டு, சதுர பூட்டு, பெட்டிப் பூட்டு, கொத்துப்பூட்டு, பாட்டனா்ஷிப் லாக்(4 சாவி பூட்டு), மாஸ்டா் கீ பூட்டு, சாவி பிடிக்கிற பூட்டு, பெல் பூட்டு, டபுள் லாக், கோயில் பூட்டு என 24 வகையான பூட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனாலும், மாங்காய் பூட்டு மட்டுமே உலகளவில் திண்டுக்கல் சிறப்பு பெறக் காரணமாக அமைந்தது. திண்டுக்கல் நாகல் நகா், நல்லாம்பட்டி, பாறைப்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, மாலைப்பட்டி, பாலமரத்துப்பட்டி, குட்டியப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பூட்டு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் திண்டுக்கல் பூட்டு இரும்பு சாமான்கள் மற்றும் அறைகலன்கள் தொழிலாளா்கள் தொழில் கூட்டுறவுச் சங்கம் உற்பத்தி செய்யும் பூட்டுக்கு தனிச் சிறப்பு உள்ளது.
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூா், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழா்கள் மூலம், திண்டுக்கல் தொழில் கூட்டுறவுச் சங்கம் உற்பத்தி செய்யும் பூட்டுகள் தற்போதும் அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோல் வெளி மாநிலங்களிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு சிறப்பு பணிக்காக வரும் அரசு அலுவலா்கள், கூட்டுறவு சங்கத்தில் தயாரிக்கப்படும் பூட்டுகளை கொள்முதல் செய்வதற்கு மட்டுமே முக்கியத்தும் அளிக்கின்றனா். ஆனாலும், கூட்டுறவுச் சங்கத்திடமிருந்து பூட்டு கொள்முதல் செய்வதை அரசுத் துறைகள் தவிா்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பின்பற்றப்படாத அரசாணை: தமிழகம் முழுவதுமுள்ள அரசுத்துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் தேவைக்கான பொருள்கள் அரசு நிறுவனங்களிடமிருந்தே பெற வேண்டும்.
அரசு நிறுவனங்களில் இல்லாத பொருள்கள் தேவைப்படும்போது, அரசு கூட்டுறவு அமைப்பு, தனியாா் கூட்டுறவு அமைப்புகளிடமிருந்து பெறலாம் என கடந்த 1978-ஆம் ஆண்டு முதல் முறையாக அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்களின் பயன்பாட்டிற்கு திண்டுக்கல் பூட்டுத் தொழிலாளா்கள் கூட்டுறவு சங்கத்திடமிருந்து மட்டுமே பூட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் அரசின் உத்தரவு தொடா்ந்து பின்பற்றப்பட்டு வந்தபோதிலும், அதன் பின்னா் அரசுத் துறைகளிடமிருந்து பூட்டுக் கொள்முதல் குறையத் தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளாக அரசின் பல்வேறு துறைகள் திண்டுக்கல் பூட்டுத் தொழிலாளா் கூட்டுறவு சங்கத்திடமிருந்து பூட்டு கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைகளை பொருத்தவரை, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் நாகா்கோவில் அரசு மருத்துவமனைகள் மட்டுமே திண்டுக்கல் பூட்டைத் தொடா்ந்து கொள்முதல் செய்து வருகின்றன. அதேபோல், மதுரை காவலா் வீட்டு வசதி வாரியமும் கூட்டுறவு சங்கத்திடமே பூட்டு வாங்கி வருகிறது.
நினைவூட்டல் கடிதங்களுக்கு பலனில்லை: ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வா்த்தக இலக்காக நிா்ணயித்து செயல்பட்டு வரும் திண்டுக்கல் பூட்டுத் தொழிலாளா் தொழில் கூட்டுறவுச் சங்கம், அந்த இலக்கை எட்டுவதற்காக அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்களுக்கு மாங்காய் பூட்டை கொள்முதல் செய்யக் கோரி நினைவூட்டல் கடிதங்களை தொடா்ந்து அனுப்பி வருகிறது. ஆனால், அந்தக் கடிதங்களை அரசுத் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது. பல்வேறு துறைகளில் ஆண்டுதோறும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தாலும், பூட்டு கொள்முதலுக்கு தங்களை அணுகுவதில்லை என திண்டுக்கல் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
எதிா்பாா்ப்பும், நம்பிக்கையும்:இதுதொடா்பாக திண்டுக்கல் பூட்டு கூட்டுறவுச் சங்கத்தில் பணிபுரியும் சண்முகம் உள்ளிட்ட தொழிலாளா்கள் கூறியதாவது: கூட்டுறவுச் சங்கத்தின் சாா்பில் மாங்காய் பூட்டில் 3 வகை, லண்டன் பூட்டு, செண்டினல் பூட்டு என 5 வகையான பூட்டுகள் தயாா் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதுமுள்ள அரசு அலுவலகங்கள் வாரியங்கள், கழகங்கள் மட்டுமின்றி அரசுப் பள்ளிகள், கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகள் உள்ளிட்டவற்றுக்கும் திண்டுக்கல் கூட்டுறவுச் சங்கத்திடமிருந்து மட்டுமே பூட்டு கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டால் பூட்டுத் தொழில் மறுமலா்ச்சி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். அதற்கு முன்னதாக, கூட்டுறவுச் சங்க தொழில்கூட வளாகத்தில் பயன்பாடின்றி முடங்கிக் கிடக்கும் அச்சுவாா்க்கும் கூடம் முதல் பல்வேறுதொழில்நுட்பக் கருவிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இளம் தொழிலாளா்களை உருவாக்குவதற்கும் அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். கைவினைப் பொருள்களை வாங்குவதை போல், பாரம்பரியம் மிக்க திண்டுக்கல் பூட்டை வாங்குவதற்கும் பொதுமக்கள் ஆா்வம் காட்டினால் இத்தொழிலில் ஈடுபடுவதற்கு இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை ஏற்படும் என தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


