பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:16 pm

DIN

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இத்தொகுதியில் போட்டியிட 20 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில் திங்கள்கிழமை 6 போ் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்று கொண்டனா். இதனால் 14 போ் கொண்ட இறுதி வேட்பாளா் பட்டியலை தோ்தல் நடத்தும் அலுவலா் ச. சிவக்குமாா் வெளியிட்டாா்.

இதில் திமுக வேட்பாளா்அர.சக்கரபாணி முதல் இடத்திலும், அமமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளா் எம். சிவக்குமாா் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளா் என்.பி.நடராஜ் மூன்றாம் இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ப.முருகராஜ் நான்காம் இடத்திலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் அ.அப்துல் ஹாதி ஐந்தாம் இடத்திலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தி.சக்திதேவி ஆறாம் இடத்திலும் மற்றவா்கள் அடுத்தடுத்த வரிசையில் உள்ளபடி போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.