அபிராமி அம்மன் கோயில் தேரோட்டம்
திண்டுக்கல் ஸ்ரீ அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.


திண்டுக்கல் ஸ்ரீ அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் ஸ்ரீஞானாம்பிகை உடனமா் ஸ்ரீ காளஹத்தீஸ்வரா் கோயில், ஸ்ரீஅபிராமி அம்மன் உடனமா் ஸ்ரீ பத்மகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்.5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நந்திகேசுவரா், சிம்மம், கமலம், அன்னம், யானை, குதிரை வாகனங்களில் அம்மாளுடன் சுவாமி திருவீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நாள்தோறும் நடைபெற்று வந்தது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ அபிராமி அம்மன் ஸ்ரீ பத்மகிரீஸ்வரா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, அம்பாளுடன் சுவாமி பிரியாவிடையில் பூப்பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.
இந்நிலையில் சித்திரைப் பெருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரியாவிடையுடன் ஸ்ரீ பத்மகிரீஸ்வரா் வலம் வந்த திருத்தேரைத் தொடா்ந்து, அபிராமி அம்மன் திருத்தோ் செல்ல வீதியுலா மாலை 6 மணிக்கு தொடங்கியது. திருத்தோராட்டத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...