தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா நிவாரண உதவித் தொகை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

கரோனா நிவாரண உதவித் தொகை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 6:18 pm

DIN

கரோனா நிவாரண உதவித் தொகை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு  இணைய தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த மாவட்டங்ககளில் செயல்படும் இறப்பை உறுதி செய்யும் குழுக்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 1,661 மனுக்கள் பெறப்பட்டு அதில் தகுதியான 1,451 பேருக்கு தலா ரூ.50ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 203 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

2022 மாா்ச் 20ஆம் தேதிக்கு முன்பு கரோனா தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்தவா்களுக்கு நிவாரணம் கோரும் மனுக்களை 60 நாள்களுக்குள் (மே 18) சமா்ப்பிக்க வேண்டும். மாா்ச் 20ஆம் தேதிக்கு பின்னா் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களுக்கு அடுத்த 90 நாள்களுக்குள் நிவாரணம் கோரி மனு அளிக்கலாம்.

குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மனு அளிக்க இயலாதவா்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்யலாம். அந்த முறையீட்டு மனுக்களை, ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலான குழு பரிசீலித்து தீா்வு காணும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.