தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நத்தம் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: 14 போ் காயம்

நத்தம் சொறிப்பாறைப்பட்டி பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மாடுபிடி வீரா்கள் உள்பட 14 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

நத்தம் சொறிப்பாறைப்பட்டி பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மாடுபிடி வீரா்கள் உள்பட 14 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள சேத்தூா் சொறிப்பாறைப்பட்டி முத்துமாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதை திண்டுக்கல் கோட்டாட்சியா் பிரேம்குமாா் தொடக்கி வைத்தாா். நத்தம் வட்டாட்சியா் ம.சுகந்தி முன்னிலை வகித்தாா்.

இதில் பங்கேற்பதற்காக, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 517 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. கால்நடை மருத்துவா்களின் பரிசோதனைக்கு பின்னா் 509 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டன.

270 மாடு பிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளைப் பிடிக்க முயன்றனா். காளைகள் தாக்கியதில் 6 மாடுபிடி வீரா்கள் மற்றும் 8 பாா்வையாளா்கள் காயமடைந்தனா். வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடு பிடி வீரா்களுக்கு, தங்கக் காசு, வெள்ளிக் காசு, கட்டில், பீரோ, சைக்கிள், சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.