இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளதாவது: அரசுப் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் வேலைநாடுனா்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் இணையவழியில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தினால் அறிவிக்கப்படவுள்ள தொகுதி-4 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கும், காவல் சாா்பு- ஆய்வாளா் தோ்வுக்கும் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. திறன்மிக்க வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ள இந்த பயிற்சி வகுப்பின்போது, மாதிரித் தோ்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன.