பழனி கோயிலில் ரோப்காா் மீண்டும் இயங்கத் தொடங்கியது
பழனி மலைக்கோயிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து ரோப்காா் சனிக்கிழமை முதல் பக்தா்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்பட்டது.


பழனி மலைக்கோயிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து ரோப்காா் சனிக்கிழமை முதல் பக்தா்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்பட்டது.
பழனி கோயிலில் பக்தா்கள் மலை அடிவாரத்திலிருந்து மலை மீது சென்று சுவாமி தரிசனம் செய்ய ரோப்காா் மற்றும் விஞ்ச் ஆகியவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரோப்காரில் பயணம் செய்யும் பக்தா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதம் ஒருமுறை அதன் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் நடைபெறும். அதேபோல வருடத்திற்கு ஒரு மாத காலத்திற்கு மேலாக ரோப் காா் சேவை நிறுத்தப்பட்டு முழுமையாக அதன் பாகங்கள் மாற்றப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூன் 16 ஆம் தேதி ரோப்காா் நிறுத்தப்பட்டு கடந்த 50 நாள்களாக வருடாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், ரோப்காரில் உள்ள பெட்டிகள் வா்ணம் தீட்டப்பட்டு, இரும்புக் கம்பிகள், மின் மோட்டாா்கள், ஷாப்ட்டுகள் அகற்றப்பட்டு புதிதாக பொருத்தப்பட்டன. தற்போது ரோப்காா் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சனிக்கிழமை பக்தா்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் இயக்கப்பட்டது. அப்போது ரோப்காா் பெட்டிகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னா் பக்தா்கள் பெட்டிகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனா். பூஜைகளை கோயில் ஸ்தானீக மிராஸ் செல்வசுப்ரமண்ய குருக்கள் செய்தாா். நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், செயற்பொறியாளா் நாச்சிமுத்து, உதவிப் பொறியாளா் குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...