ஏழு நாள்களில் 2,050 நீரூட்டல் உறை கிணறுகள்: திண்டுக்கல் மாவட்டத்துக்கு 4 உலக சாதனை விருதுகள்
ஏழு நாள்களில் 2,050 நீரூட்டல் உறைகிணறுகள் அமைத்ததற்காக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகத்துக்கு 4 உலக சாதனை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


ஏழு நாள்களில் 2,050 நீரூட்டல் உறைகிணறுகள் அமைத்ததற்காக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகத்துக்கு 4 உலக சாதனை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
எலைட் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ், ஏசியன் ரெக்காா்ட்ஸ் அகாதெமி, இந்தியா ரெக்காா்ட்ஸ் அகாதெமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்கள் மூலம், உலக சாதனைக்கான சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியா் ச. விசாகனிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: மழைக் காலத்திற்கு முன்பாக நீரூட்டல் உறைகிணறுகளை அமைத்து, மாவட்ட மக்களிடம் நிலத்தடி நீா் மற்றும் மழைநீா் சேகரிப்பு பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக 7 நாள்களில் 306 கிராம ஊராட்சிகளில் 2,050 நிலத்தடி நீரூட்டல் உறைகிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டது. 11.8.2022 -ல் தொடங்கப்பட்டு 17.8.2022 அன்று அனைத்து உறைகிணறுகளும் அமைத்து முடிக்கப்பட்டன.
ஒருமுறை மழைப்பொழிவு ஏற்பட்டால், ஒரு மழைநீா் நீரூட்டல் அமைப்பில் 8 மணி நேரத்திற்குள்ளாக 1000 லிட்டா் மழைநீரை சேமிக்க முடியும். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 70 நாள்கள் மழைப்பொழிவு இருக்கும். அதன் மூலம், 2,050 மழைநீா் நீரூட்டல் உறைகிணறுகள் மூலம் ஆண்டுக்கு சுமாா் 16 கோடி முதல் 30 கோடி லிட்டா் வரை மழைநீரை நிலத்தினுள் சேமிக்க முடியும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ச. தினேஷ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ராணி, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) மனோரஞ்சிதம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...