நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தாடிக்கொம்பு கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி தாடிக்கொம்பு சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 7:09 pm

DIN

தேய்பிறை அஷ்டமியையொட்டி தாடிக்கொம்பு சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளில் சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட பால், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சுவாமிக்கு 6 கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து சுவாமிக்கு ராஜஅலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இச்சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல், திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள காலபைரவா் சந்நிதியிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.