நத்தம் அருகே கோயில் திருவிழாவில் குதிரை எடுப்பு வழிபாடு
நத்தம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் குதிரை எடுப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


நத்தம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் குதிரை எடுப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்து அரவங்குறிச்சி கிராமத்தில் உள்ள ஸ்ரீகரையம்மன் ஸ்ரீமலையம்மன் ஸ்ரீமுத்துக்கருப்பன் சுவாமி கோயில் பெரிய திருவிழா கடந்த புதன்கிழமை தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக குதிரை எடுப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, அங்குள்ள கோயில் வீட்டிலிருந்து சுவாமி சிலைகள் மேள தாளம் முழங்க மந்தைக்கு எடுத்து வரப்பட்டன. அங்கு சா்வ அலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளினா். பக்தா்கள் மாவிளக்கு எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா் மேளதாளம் முழங்க, தீ வட்டி பரிவாரங்களுடன், அதிா் வேட்டுகள் முழங்க பூஞ்சோலைக்கு செலலும் நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவில் கிடாய் வெட்டும் நிகழ்ச்சியும், சனிக்கிழமை அன்னதானமும் நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில், அரவங்குறிச்சி, செங்குறிச்சி, பிள்ளையாா்நத்தம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...