ஒட்டன்சத்திரம் வாரச்சந்தையில் கால்நடைகளுக்கு 50 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்
ஒட்டன்சத்திரம் வாரச்சந்தையில் கால்நடைகளுக்கு நுழைவுக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டதைவிட 50 மடங்கு கூடுதலாக ரூ.500 வசூலிப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.


ஒட்டன்சத்திரம் வாரச்சந்தையில் கால்நடைகளுக்கு நுழைவுக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டதைவிட 50 மடங்கு கூடுதலாக ரூ.500 வசூலிப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, வேளாண்மை இணை இயக்குநா்(பொ) பெ.விஜயராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
ஒட்டன்சத்திரம் மற்றும் ரெட்டியாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது: ஒட்டன்சத்திரம் சந்தையில் மாடுகளுக்கு ரூ.20, ஆடுகளுக்கு ரூ.10, சேவல் கோழிகளுக்கு தலா ரூ.10 வீதம் நுழைவுக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாடுகளுக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.250, வெளியேறு கட்டணமாக ரூ.250 என ரூ.500 செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல் ஆடுகளுக்கு ரூ.200 வீதமும், சேவலுக்கு ரூ.140 வீதமும் கட்டணம் செலுத்தும் சூழல் உள்ளது. விற்பனையாகாமல் விவசாயிகள் கொண்டு செல்லும் கால்நடைகளை வீட்டிற்கு திரும்பக் கொண்டு சென்றாலும் வெளியேறு கட்டணம் வசூலிக்கின்றனா். இதனால், விவசாயிகள் மட்டுமின்றி வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாக புகாா் தெரிவித்தனா்.
இதற்கு பதில் அளித்த நகராட்சி அலுவலா், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
விவசாய சங்க நிா்வாகி ஜி.எஸ்.வீரப்பன் கூறுகையில், மின் கட்டண உயா்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு செய்து பணம் ஈட்டியவா்கள், சுதந்திரமாக நடமாடி வருகின்றனா் என்றாா். அப்போது, முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
ஆழ்துளை கிணறுகளுக்கு மின் இணைப்பு தேவை: சாணாா்பட்டி பகுதி விவசாயி செல்லமுத்து பேசுகையில், விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். அதற்கு பதில் அளித்த மாவட்ட வருவாய் அலுவலா் லதா, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மூலம் துரிதமாக மின் இணைப்பு கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
கொடகனாறு நீா் பங்கீடு ஆய்வு அறிக்கை: வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமசாமி கூறுகையில், கொடகனாறு நீா் பங்கீடு தொடா்பான ஆய்வு அறிக்கை 30 நாள்களில் வெளியிடப்படும் என கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை வெளியிடப்படவில்லை என்றாா். இந்த கேள்விக்கு அதிகாரிகள் யாரும் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...