காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பக்ரீத் பண்டிகை: அய்யலூா் சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அய்யலூா் வாரச் சந்தையில் வியாழக்கிழமை ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:23 pm

DIN

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அய்யலூா் வாரச் சந்தையில் வியாழக்கிழமை ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வியாழக்கிழமை வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி மாவட்டத்திலுள்ள ஊரகப் பகுதிகளிலிருந்தும் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதேபோல், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகளும் வருகின்றனா்.

இந்நிலையில், ஜூலை 10ஆம் தேதி இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்படவுள்ள நிலையில், அய்யலூா் சந்தையில் செம்மறி ஆடுகள் விற்பனை வியாழக்கிழமை அமோகமாக நடைபெற்றது. குா்பானி கொடுக்க பயன்படும் ஆடுகள் ரூ.20ஆயிரம் முதல் ரூ.30ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. 10 கிலோவுக்கு குறைவான எடையுள்ள செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் ரூ.7ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டன.

இதேபோல் நாட்டுக் கோழி மற்றும் சண்டை சேவல்களும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டன. ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.