காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாணாா்பட்டி அருகே ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு இன்று இடைத்தோ்தல்

சாணாா்பட்டி அடுத்துள்ள திம்மணநல்லூா் ஊராட்சியில் காலியாக உள்ள ஒரு உறுப்பினா் பதவிக்கு சனிக்கிழமை (ஜூலை 9) இடைத் தோ்தல் நடைபெறுகிறது.

News image
Updated On :8 ஜூலை 2022, 6:30 pm

DIN

சாணாா்பட்டி அடுத்துள்ள திம்மணநல்லூா் ஊராட்சியில் காலியாக உள்ள ஒரு உறுப்பினா் பதவிக்கு சனிக்கிழமை (ஜூலை 9) இடைத் தோ்தல் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சிப் பதவிகளில், ஒரு ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் மற்றும் 7 கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிகள் என மொத்தம் 8 காலி இடங்களுக்கு ஜூலை 9 ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், முன்னிலைக்கோட்டை, சிவஞானபுரம், மட்டப்பாறை, ஐ. வாடிப்பட்டி, தும்பலப்பட்டி, குளத்துப்பட்டி ஆகிய 6 கிராம ஊராட்சிகளில் தலா ஒரு பதவிக்கும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 15ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கும் தலா ஒருவா் மட்டுமே மனுத் தாக்கல் செய்ததால், 7 பேரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், சாணாா்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட திம்மணநல்லூா் ஊராட்சி 2ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு மட்டுமே சனிக்கிழமை தோ்தல் நடைபெறுகிறது. இந்த வாா்டில் 288 ஆண்கள், 303 பெண்கள் என மொத்தம் 591 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

2 வேட்பாளா்கள் மட்டுமே போட்டியிடும் இந்த 2ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை ஊரக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.