ரயில் மோதி பாலிடெக்னிக் மாணவா் பலி
குஜிலியம்பாறை அருகே ரயில் மோதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.


குஜிலியம்பாறை அருகே ரயில் மோதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்தவா் இடும்பையா. இவரது மகன் ஜெகன் (17). இவா், கூடலூரில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தாா். இந்நிலையில் குஜிலியம்பாறை அருகே ரயில்வே தண்டவாளத்தை வியாழக்கிழமை இரவு ஜெகன் கடந்து செல்ல முயன்றுள்ளாா். அப்போது, அந்த வழியாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...