வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞா் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துவிட்டு 5 ஆண்டுகளாக காத்திருப்போா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பற்ற இளைஞா் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துவிட்டு 5 ஆண்டுகளாக காத்திருப்போா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் ச.பிரபாவதி தெரிவித்துள்ளது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவுசெய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதோா், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பினைப் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவுற்று 2022 ஜூன் 30ஆம் தேதி வரை தொடா்ந்து புதுப்பித்து வருவோா், 2022 ஜூலை முதல் உதவித்தொகை பெறலாம். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதளத்தில் படிவத்தினை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூா்த்தி செய்து ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...